சீனாவின் ஹெனன் மாகாணத்தை சேர்ந்தவர் 28 வயதான லியு. அவர் வீட்டு பின்புறத்தில் இருந்த சிறிய ஆழ்துளை கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து சிக்கிக் கொண்டுள்ளார்.
உடனடியாக அவரை மீட்க அந்த பகுதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் ஐந்து பேர் விரைந்துள்ளனர். அந்த கிணறு மிக குறுகிய கிணறாக இருந்ததால் கிணற்றுக்குள் விழாமல் உயிர் தப்பியுள்ளார் லியு. அவரது குண்டான உடல் வாகு தான் கிணற்றுக்குள் லியு விழுந்தும் உள்ளே செல்லாமல் இருக்க காரணம் என தெரிவித்துள்ளனர் அவரை காத்த தீயணைப்பு வீரர்கள்.
‘லியு கிணற்றில் மிக இறுக்கமாக சிக்கியிருப்பதை நாங்கள் அவரை பார்த்ததும் புரிந்து கொண்டோம். அவரை மீட்க கயிறுகளை பயன்படுத்தினோம். முற்றிலும் பாதிப்பு ஏதும் இல்லாமல் அவரை மீட்டெடுத்தோம். லியுவின் மொத்த உடல் எடை சுமார் 500 பவுண்டுகள் இருக்கும்’ என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள லியு கிணற்றில் குதித்ததாகத் தெரிகிறது. சமூக வலைத்தளத்தில் லியுவை தீயணைய்ப்பு வீரர்கள் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.