அமெரிக்காவை அடுத்து பிலிப்பைன்ஸை தாக்க வரும் மங்குட் புயல்

அமெரிக்காவை அடுத்து பிலிப்பைன்ஸை தாக்க வரும் மங்குட் புயல்
அமெரிக்காவை அடுத்து பிலிப்பைன்ஸை தாக்க வரும் மங்குட் புயல்
Published on

பிலிப்பைன்ஸை அச்சுறுத்தி வரும் மங்குட் புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டிருப்பதால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் ஃபிளாரென்ஸ் புயலை விட, மங்குட் புயல் மிகுந்த வலிமையானது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மணிக்கு 285 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பிலிப்பைன்ஸின் லுசான் தீவு மிகுந்த சேதத்தை சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அங்கு வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அரசு கவலை அடைந்துள்ளது. ஏற்கெனவே பசிபிக் கடல்  பகுதியில் உள்ள மார்ஷல் தீவுகளில் பாதிப்பை ஏற்படுத்திய மங்குட் புயல் மெல்ல பிலிப்பைன்ஸை நோக்கி முன்னேறி வருகிறது. இதையடுத்து, வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்களும், மீட்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

புயல் கரையை கடக்கும்போது, மின்சாரம் ‌மற்றும் தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உருவாகி இருப்பதால், அங்கு வசித்து வரும் மக்களும் வேறு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com