sick leave
sick leave முகநூல்

Sick Leave கேட்ட ஊழியர்! 7 நாட்களுக்கு முன் அறிவிக்க சொன்ன மேலாளர்! இணையத்தை கலக்கும் வைரல் பதிவு!

ஊழியர் ஒருவர் தனது மேலாளரிடம் உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பு வேண்டும் என்று கேட்டதற்கு, நோய் விடுப்பு வேண்டுமெனில் அதை 7 நாட்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டுமென மேலாளர் கூறியுள்ளது இணைய வாசிகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
Published on

ஊழியர் ஒருவர் தனது மேலாளரிடம் உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பு வேண்டும் என்று கேட்டதற்கு, நோய் விடுப்பு வேண்டுமெனில் அதை 7 நாட்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டுமன மேலாளர் கூறியுள்ளது இணையவாசிகளிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோய்வாய்க்கான விடுப்பு, சாதாரண விடுப்புகள் உள்ளன. அதுதான் sick leave, causal leave இருக்கிறதே, நினைத்தபடி விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் அது அவ்வளவு எளிதும் அல்ல..

ஒரு சில நிறுவனங்கள் இந்த விடுமுறைகளை கேட்டவுடனே கொடுத்து விட்டாலும், இன்னும் சில நிறுவங்கள் அவ்வளவு எளிதாக விடுப்பு வழங்குவது இல்லை... வேலை அதிகமாக இருக்கிறது, ஆட்கள் பற்றாக்குறை, கேட்ட நேரத்தில் எல்லாம் விடுமுறை கொடுக்கமுடியாது என்று...பல காரணங்களை கூறி... விடுப்பு கேட்டவரையே , இதற்கு பேசாமல் வேலைக்கே வந்துவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு எண்ணத்தை உருவாக்கி விடுவார்கள்.

இதேபோலதான், சமீபத்தில், விடுப்பு கேட்ட ஊழியர் ஒருவருக்கு அவரின் மேலாளர் அளித்த பதில்கள் அடங்கிய ஸ்கீரீன்ஷாட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஸ்கீரீன்ஷாட்டில், ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், தனது மேலாளரிடம். “ எனக்கு உடல்நிலை சரியில்லை...எனவே, என்னால், அலுவலகத்திற்கு இன்று வர இயலாது. “ என்று விடுப்பு வேண்டி வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மேலாளர், “ இன்று உங்களுக்கு sick leave வேண்டுமா?....., உங்களுக்கு sick leave அல்லது casual leave வேண்டுமென்றால் குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக தெரியப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதை, சமூகவலைதளத்தில் பகிர்ந்த அந்த ஊழியர் , “எப்படி sick leaveவை ஏழு நாட்களுக்கு முன்பாக கேட்ட முடியும்?..” ன்று பதிவிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

ஊழியரின் இந்த பதிவிற்கு பலர் தங்களின் நகைச்சுவையான கருத்துகளையும் இடுக்கையின் கீழ் பகிர்ந்து வருகின்றனர்.

அதில், ஒரு பயனர், “ நீங்கள் பேசாமல்,தினமும் ஒரு மெயிலை உங்களின் மேலாளருக்கு அனுப்புங்கள். அதில், இன்றைய நாளிலிருந்து நான் உங்களுக்கு அனுப்பும் விடுப்பு குறித்த அனுமதி கடிதத்தை, எப்பொழுது எனக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறதோ அப்போது... கணக்கில் எடுத்துக் கொண்டு எனக்கு விடுப்பு வழங்கி விடுங்கள் .என்று தெரிவியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

sick leave
‘லீவு எடுத்துக்கோங்க..’ கம்பெனி CEO சொன்னபோதும் மறுப்பு தெரிவித்த இந்தியர்! வைரலாகும் பதிவு!

இந்நிலையில், ஊழியர் பகிர்ந்த இந்த ஸ்கீன்ஷாட் தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com