அமெரிக்காவில் இந்தியருக்குச் சொந்தமான கடையில், தீ வைக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்தியருக்கு சொந்தமான கடையில் நேற்று காலை ஒருவர், தீ வைக்க முயன்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு 30,000 டாலர் அபராதமும் வழங்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கடையின் உரிமையாளர் முஸ்லீம் என நினைத்து தீ வைக்க முயன்றதாகக் கூறினார். அரேபியாவைச் சேர்ந்தவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் இந்திய இளம் பொறியாளர் கடந்த 22-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த தாக்குதலுக்கு காரணமும் அவர் ஒரு அரேபியன் என நினைத்து நடந்ததே எனக் கூறப்படுகிறது.