ஃபேஸ் ஆப் மூலம் இணைந்த குடும்பம் : 18 வருட தேடல்

ஃபேஸ் ஆப் மூலம் இணைந்த குடும்பம் : 18 வருட தேடல்
ஃபேஸ் ஆப் மூலம் இணைந்த குடும்பம் : 18 வருட தேடல்
Published on

சீனாவில் 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபர், ஃபேஸ் ஆப் செயலி மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோருடன் மீண்டும் இணைந்தார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் செயலி ஃபேஸ் ஆப். தற்போதைய அசல் புகைப்படத்தை இளமையான தோற்றம் மற்றும் வயதான தோற்றமுடையவராக மாற்றிக்காட்டும் ஃபேஸ் ஆப் செயலி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சீனாவில் 3 வயது இருக்கும்போது காணாமல் போன ஷை யு வீபெங் என்பவர், தனது புகைப்படத்தை ஃபேஸ் ஆப் செயலியில் எடிட் செய்து 18 ஆண்டுகளுக்கு முந்தைய அவரது குழந்தை படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

சமூக வலைதளத்தில் ஷை யுவின் புகைப்படத்தை பார்த்த அவரது பெற்றோர்கள், காணாமல் போன தங்களது மகன் என்பதை உறுதி செய்து காவல்துறையில் ‌தக‌வல் தெரிவித்துள்ளனர். பின்னர் காவல்துறையி‌னர், அந்த இளைஞரைப் பிடித்து, மரபணு பரிசோதனைக்கு உட்‌படுத்தி, அவரை பெ‌ற்றோரிடம் கொண்டு சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com