அமெரிக்கா | போராட்டத்தின் போது நீதிமன்ற வாசலில் விபரீத முடிவெடுத்த நபர்!

அமெரிக்காவில் போராட்டத்தின் போது நீதிமன்றத்திற்கு வெளியே ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காமுகநூல்
Published on

அமெரிக்காவில் நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அவரை கண்டித்தும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக நீதிமன்றத்திற்கு வெளியே பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தீக்குளித்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் கைகளில் பதாகை மற்றும் துண்டு பிரசுரங்களை வைத்திருந்ததும், அதில் மோசமான தொழிலதிபர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

அமெரிக்கா
பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!

அதில் யாரையும் குறிப்பிட்டு பெயர்கள் இடம்பெறாததால், தீக்குளித்த நபரின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே நீதிமன்ற விசாரணையில் ட்ரம்ப் தரப்பின் மேல்முறையீடு ஏற்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com