சாண்ட்விச்சில் இவ்வளோ மயோவா? - ஊழியரை சுட்டுக்கொன்ற கஸ்டமர்.. அட்லான்டாவில் பயங்கரம்!

சாண்ட்விச்சில் இவ்வளோ மயோவா? - ஊழியரை சுட்டுக்கொன்ற கஸ்டமர்.. அட்லான்டாவில் பயங்கரம்!
சாண்ட்விச்சில் இவ்வளோ மயோவா? - ஊழியரை சுட்டுக்கொன்ற கஸ்டமர்.. அட்லான்டாவில் பயங்கரம்!
Published on

சாண்ட்விச்சில் மயோனைஸ் அதிகமாக போட்டதற்காக சப்வே உணவக ஊழியரை வாடிக்கையாளர் சுட்டுக் கொன்ற பயங்கரம் அட்லான்டாவில் அரங்கேறியிருக்கிறது. ஜார்ஜியாவின் அட்லான்டாவில் கடந்த ஞாயிறன்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அட்லான்டாவில் உள்ள சப்வே உணவகத்தில் 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாண்ட்விச் ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது அவரது சாண்ட்விச்சில் அதிகளவில் மயோனைஸ் சாஸ் ஊற்றப்பட்டிருந்ததால் அந்த வாடிக்கையாளர் கோபமுற்று உணவக ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த வாக்குவாதம் கொலைவெறியாக மாறி, தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சப்வே ஊழியர் பிரிட்டானி மெக்கானை (26) சுட்டுக் கொன்றிருக்கிறார். அதேவேளையில் ஜடா ஸ்டாடம் (24) என்ற மற்றொரு ஊழியரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தின்போது ஜடாவின் 5 வயது மகனும் அங்கிருந்திருக்கிறார்.

இதனையடுத்து, விஷயம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அட்லான்டா நகர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த வாடிக்கையாளரை கைது செய்ததோடு, படுகாயமடைந்த ஜடாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ALSO READ: 

இது தொடர்பாக பேசியுள்ள அட்லான்டா போலீஸ் அதிகாரி சார்லஸ் ஹாம்ப்டன், “சப்வே ஊழியரை சுட்டுக்கொன்ற நபரை கைது செய்துள்ளோம்.” எனக் கூறியுள்ளார். இதனிடையே ”எப்படி ஒரு நபர் துணிச்சலாக மற்றொருவரை நோக்கி துப்பாக்கியால் கொல்ல முடிகிறது. அதுவும் சாண்ட்விச்சில் மயோனைஸ் அதிகமானதற்கெல்லாம் இப்படி செய்தது இதயத்தை கனக்கச் செய்கிறது” என சப்வே உணவகத்தின் இணை நிறுவனர் வில்லி க்ளென் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் தலைவிரித்தாடும் நிலையில், அப்பாவி ஒருவர் இறந்து, மற்றொருவர் கவலைக்கிடமாக இருக்கும் இந்த சப்வே சம்பவம் அட்லான்டா மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com