26 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு திடீரென லாட்டரியில் கிடைத்த கணவனின் ஒட்டுமொத்த பணத்தை சுருட்டிக்கொண்டு காதலனுடன் 3 பிள்ளைகளுக்கு தாயான பெண் ஒருவர் தப்பிய சம்பவம் தாய்லாந்து நாட்டில் அரங்கேறியிருக்கிறது.
1,36,98,589 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி பணத்தை எடுத்துச் சென்றதை காட்டிலும், மனைவி தன்னை உதறித்தள்ளிவிட்டு சென்றது தாய்லாந்தைச் சேர்ந்த அந்த கணவரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது என்பதை டெய்லி ஸ்டார் செய்தி தளத்தில் குறிப்பிட்டுள்ளதன் மூலம் அறியலாம்.
மணித், அங்கணரட் என்ற தம்பதி கடந்த 26 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். மணித் - அங்கரணட்டிற்கு 3 பிள்ளைகளும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், இருவரும் ஒன்றிணைந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 6 மில்லியன் தாய் பாட் (1.36 கோடி ரூபாய்) பரிசாக கிடைத்திருக்கிறது.
இந்த பணத்தை வைத்து அவர்கள் வீட்டில் நடைபெற இருந்த நிகழ்வுக்கும், கோவில் வழிபாட்டுக்காகவும் செலவிட மணித் திட்டமிட்டிருந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் போது வந்திருந்த நபரை குறிப்பிட்டு அங்கணரட்டிடம் மணித் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் தூரத்து உறவினர் என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.
ஆனால் அந்த நபர்தான் அங்கணரட்டின் காதலன் என்பது இருவரும் நிகழ்ச்சியின் போது இருவரும் லாட்டரியில் கிடைத்த பணத்தோடு தப்பியதின் மூலம் தெரிந்திருக்கிறது. இதனையறிந்து மணித் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்த போது, மணித் - அங்கணரட்டின் 26 ஆண்டுகளாக வாழ்ந்திருந்தாலும், இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்திருக்காததால் தங்களால் உதவ முடியாது என்றிருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில், தங்களுடைய உறவுக்குள் இதுவரை எந்த விரிசலும் வந்ததில்லை என மணித் தெரிவித்திருக்கிறார். ஆனால், அங்கணரட்டின் காதல் குறித்து தனக்கு முன்னரே தெரியும் என்று மணித்தின் மகன் போலீசிடம் கூறியிருக்கிறார்.
மேலும், நிகழ்ச்சியில் இருந்து தப்பிச் சென்ற நான்கு மணிநேரத்துக்கு பிறகு தனது அம்மாவை ஃபோனில் தொடர்பு கொண்டதாகவும், அதன் பின்னர் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறிய போலீசார், நடந்தவற்றை வைத்து பார்க்கும் போது பணத்தை மணித் பரிசாக கொடுத்தது போலவே தெரியும். ஆகவே அங்கணரட்டிடம் இருந்து வற்புறுத்தி பெறுவதே எஞ்சியிருக்கும் ஒரே வழியாக இருக்கும் எனவும் போலீசார் கூறியிருக்கிறார்கள்.