மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அதிபர் இப்ராகிம், பிரதமர் சீஸேவை துப்பாக்கி முனையில் ராணுவ வீரர்கள் கைது செய்துள்ளனர்.
தலைநகர் பமாகோவில் டாங்கிகள், ஆயுதங்களுடன் ராணுவத்தினர் சுதந்திரமாக வலம் வந்தனர். நாட்டின் ராணுவ புரட்சி வெடித்ததாக கூறப்பட்ட நிலையில் ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் பவ்பவ் சிஸ்சே பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை கை கொடுக்கவில்லை. அதிபர் இப்ராகிம், பிரதமர் சீஸேவை துப்பாக்கி முனையில் ராணுவ வீரர்கள் கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீண்ட நாட்களாக பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்த அதிபர் இப்ராகிம் நாடாளுமன்றத்தை கலைத்தார்.
இதனிடையே எந்த நிபந்தனையும் இன்றி அதிபர், பிரதமரை உடனே ராணுவத்தினர் விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.