பாரம்பர்யத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி

பாரம்பர்யத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி
பாரம்பர்யத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி
Published on

மலேசியாவில் வாழும் இந்தியர்களின் முதன்மை பண்டிகையாக தீபாவளி திருநாள் விளங்குகிறது. நாளை மறுநாள் தீப திருநாள் கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் மலேசிய இந்தியர்கள் இந்த குதூகலத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

மலேசியாவைப் பொறுத்தவரை, தீபாவளி இந்துகள் கொண்டாடும் பண்டிகை மட்டுமல்ல; அது இன வேற்றுமை கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் தேசிய பண்டிகைகளில் ஒன்றாகவும் போற்றப்பட்டு வருகிறது. தீபாவளிக்கான விற்பனை இங்கு ஒரு மாத காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. குறிப்பாக, ஒரே இடத்தில் உடைகள் முதல் வீட்டு அலங்கரிப்பு பொருட்கள் வரை அனைத்தையும் வாங்கி கொள்ளும் வகையில் தீபாவளி வர்த்தக சந்தைகள் இங்கு பரவலாக நடத்தப்பட்டு வருகின்றன. 
மேலும், மலேசியாவின் தனிச்சிறப்பாக கருதப்படும் 'லிட்டில் இந்தியா' பகுதிகளில் தீபாவளி களைக்கட்டியுள்ளது. நவீன அணிகலனுக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் வழங்கி வரும் போதிலும், பாரம்பரியங்கள் காக்கப்படும் வகையில் பண்பாட்டு அம்சங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இது தொன்று தொட்டு வந்த இந்தியர்களின் பாரம்பரியத்தை மலேசியர்கள் இன்றும் அடுத்த தலைமுறையினருக்கு கற்று கொடுப்பதை உணர்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com