தொழிலாளர் தினத்தில் உரையாற்றிய மலேசியப் பிரதமர், மே 4 ஆம் தேதி முதல் மலேசியாவில் கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் இயங்க அனுமதியளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வரும் நான்காம் தேதி முதல் அனைத்து நிறுவனங்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே தினமான தொழிலாளர் தினத்தில் தொலைக்காட்சி மூலம் பொதுமக்களிடம் உரையாற்றிய மலேசியப் பிரதமர் மொய்தீன் யாசின், வரும் நான்காம் தேதி முதல் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் அனைத்து நிறுவனங்களும் திறக்க அனுமதி அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
வருமானத்திற்கு நிறுவனங்களும், பணி வளங்களும் அவசியம் என்பதால் அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறியுள்ளார். அதே நேரம் பொதுமக்கள் அதிகம் கூடும் நிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், மலேசியாவில் மார்ச் 18 ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.