மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நஜீப் ரசாக்கும், அவரது மனைவியும் விடுமுறைக்காக நேற்று வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மலேசிய குடியுரிமை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டின் நிதியை முறைகேடாக பயன்படுத்தி பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக போதிய ஆதாரங்கள் கிடைத்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மகாதீர் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நஜீப் ரசாக் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.