VOGUE பத்திரிகையின் அட்டைப்படத்தில் 'மலாலா' : ட்விட்டரில் பகிர்ந்து பெண்களுக்கு மெசேஜ்

VOGUE பத்திரிகையின் அட்டைப்படத்தில் 'மலாலா' : ட்விட்டரில் பகிர்ந்து பெண்களுக்கு மெசேஜ்
VOGUE பத்திரிகையின் அட்டைப்படத்தில் 'மலாலா' : ட்விட்டரில் பகிர்ந்து பெண்களுக்கு மெசேஜ்
Published on

பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர்தான் 23 வயதானா மலாலா யூசஃப்சாய். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். கடந்த 2014இல் அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றுள்ளார். இந்த நிலையில் புகழ் பெற்ற VOGUE பத்திரிகையின் அட்டைப்படத்தில் 'மலாலா'-வின் படம் இடம் பெற்றுள்ளது. 

அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர் பெண்களுக்கு ஒரு மெசேஜும் கொடுத்துள்ளார். “இளம் பெண் ஒருவர் தெளிவான நோக்கத்துடன் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும்போது அவளது மன வலிமை என்ன என்பதை நான் நன்றாக அறிவேன். அதனடிப்படையில் இந்த அட்டைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் தங்களால் இந்த உலகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொள்வார்கள் என நம்புகிறேன். நன்றி!” என ட்வீட் செய்துள்ளார். 

15 வயதில் தலிபான் பயங்கரவாத படையினர் மலாலா மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். தனது பகுதியில் தலிபான் படையினரால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் உள்ள இடர் குறித்து குரல் கொடுத்ததற்காக இந்த துப்பாக்கிச்சூடு அவர் மீது நடந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com