அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
அதன்படி இன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தின் மீது வாக்களிப்பு நடைபெற்றது. பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்க 435 உறுப்பினர்கள் தகுதியானவர்கள்.
இதில், தீர்மானத்திற்கு ஆதரவாக 227 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. இதையடுத்து இந்த தீர்மானம் செனட் சபைக்கு செல்லும். அங்கு அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் பலம் தேவை. இதனால் செனட் சபையில் டிரம்ப் காப்பாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.