அமெரிக்காவில் நண்பர் ஒருவருக்கு 28 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்கின்படி தனக்கு லாட்டரியில் விழுந்த ரூ.164 கோடியை சமமாக பகிர்ந்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரைச் சேர்ந்தவர்கள் டாம் குக் மற்றும் ஜோசப் பீனி. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். 1992 ஆம் ஆண்டு நண்பர்களான இருவரும் ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இருவரில் யார் பவர்பால் ஜாக்பாட்டை வென்றாலும் அதை சரிபாதியாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. இந்நிலையில் ஏறக்குறைய 28 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் டாம் குக் பவர்பால் ஜாக்பாட் டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக டாம் குக்குக்கு ரூ.164 கோடிக்கு லாட்டரி விழுந்தது. உடனடியாக இந்தத் தகவலை ஜோசப் பீனிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இப்போது பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற பின்பு மீன்பிடி தொழிலில் இருக்கும் ஜோசப் பீனியால் இதனை நம்ப முடியவில்லை. மேலும் டாம் குக் "1992 இல் போட்ட ஒப்பந்தத்தின்படி இருவரும் இந்தப் பணத்தை பிரித்துக்கொள்ளலாம்" என கூறியுள்ளார்.
இது குறித்து டாம் குக் கூறுகையில் "இந்த் பண்ததை வைத்து மிகப்பெரிய திட்டமிடல் எல்லாம் ஒன்றுமில்லை. மகிழ்ச்சியாக ஊர் சுற்றுலாம். எஞ்சி இருக்கிற பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை நிம்மதியாக கழிக்கலாம்" என கூறியுள்ளார்.