இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
Published on

2017ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த எழுத்தாளர் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2017ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூலக்கூறு அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளுக்களில் சிறந்து விளங்கிய ஜெப்ரி ஹால், மிக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகிய மூன்று அமெரிக்கர்களுக்கு அறிவிக்கப்பட்டது. 

இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்த விஞ்ஞானிகள் ரெய்னர் வைஸ், பெரி பேரிஸ் மற்றும் தோர்ன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இவர்கள் உலகப்புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீன் ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பை நிரூபணம் செய்துள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்கான மைக்ரோஸ்கோப்பி வடிவமைத்த விஞ்ஞானிகள் ஜேக்கெஸ் டெபோசே, ரிச்சர்ட் ஹெண்டர்சன், ஜோசிம் ஃபிராங்க் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டும் வேதியியல் பிரிவில் மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த கசுவோ இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு பரிந்துரை குழு தலைவர் சாரா டேனியல் இதனை அறிவித்தார். ஜப்பானில் பிறந்த கசுவோ இசிகுரோ இங்கிலாந்தில் குடியேறியவர். இவர் ஆங்கிலத்தில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். நோபல் பரிசு வென்றுள்ள இவருக்கு ரூ.7 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com