தங்கம் இந்தியர்களின் இன்றியமையாத உலோகங்களில் ஒன்று. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக தங்கம் வாங்கி சேர்ப்பதை முக்கிய ஒன்றாக கொண்டிருக்கிறோம். ஆங்கிலேய ஆட்சிக் காலங்களுக்கு முன்பாகவே அரசர்கள் பரிசுகளாக பொற்காசுகள் தருவதை ஏட்டின் மூலம் தெரிந்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படி தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது நம்நாடு. அதன்பிறகு நடந்த போர்களிலும் அன்னிய ஆட்சிக் காலத்திலும் இந்தியாவிலிருந்து தங்கமானது கொள்ளையடிக்கப்பட்டது.
இப்படி உலகம் முழுதும் தங்கத்தின் தேவையை ஒட்டி, பொருளாதாரமானது அந்நாட்டின் தங்கத்தின் இருப்பை வைத்து தீர்மானிக்கப்பட்டது. உலகில் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார நிலையை பாதிக்கும் கருவியாக தங்கம் இருக்கிறது. இன்று தங்கமானது பங்குச் சந்தையிலும் கால் பதித்துள்ளதால், அதன் மதிப்பானது அதிகரித்தே காணப்படுகிறது.
இந்நிலையில் எந்தெந்த நாடு தங்கத்தை அதிகளவு வைத்திருக்கிறது என்று சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி
அதிக தங்கத்தை கையிருப்பாக கொண்ட முதல் நாடாக அமெரிக்காவும் ஒன்பதாவது இடத்தில் இந்தியாவும் இருக்கிறது . முதல் பத்து இடங்களின் பட்டியல் என்ன என்பதை பார்க்கலாம்.
அமெரிக்கா தனது கையிருப்பாக 8,133.46 டன் தங்கத்தை வைத்துள்ளது
இரண்டாவதாக ஜெர்மனி 3352.65 டன் தங்கத்தையும்
மூன்றாவதாக இத்தாலி 2451.84 டன்கள் தங்கத்தை கையிருப்பாக கொண்டுள்ளது.
நன்காவதாக பிரான்சிடம் 2,436.88 டன் தங்கம் கையிருப்பாக உள்ளது.
ஐந்தாவதாக ரஷ்யா 2332.74 டன் தங்கத்தையும்
ஆறாவதாக சீனா 2,191.53 டன் தங்கத்தையும்
ஏழாவதாக சுவிட்சர்லாந்து 1,040.00 டன் தங்கத்தையும்
எட்டாவதாக ஜப்பான் 845.97 டன் தங்கத்தையும்
ஓன்பதாவதாக இந்தியா 800.78 டன் தங்கத்தையும் வைத்திருக்கிறது.
இதில் பத்தாவதாக நெதர்லாந்து 612.45 டன் தங்கத்தையும்
துருக்கி 478.97டன் தங்கத்தையும்
தைவான் 423.63டன் தங்கத்தையும்
உஸ்பெகிஸ்தான் 383.83டன் தங்கத்தையும்
போர்சுக்கல் 382.63டன் தங்கத்தையும்
போலந்து 333.71டன் தங்கத்தையும்
சவுதி அரேபியா 323.07 டன் தங்கத்தையும்
இங்கிலாந்து 310.29 டன் தங்கத்தையும்
கஜகஸ்தான் 309.38 டன் தங்கத்தையும்
லெபனான் 286.83 டன் தங்கத்தையும்
ஸ்பெயின் 281.58 டன் தங்கத்தையும் கொண்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தகவலை வெளியிட்டுள்ளது.