கம்போடியா: பிரதமர் தலையிட்டால் சீன தம்பதியரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட சிங்கம்

கம்போடியா: பிரதமர் தலையிட்டால் சீன தம்பதியரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட சிங்கம்
கம்போடியா: பிரதமர் தலையிட்டால் சீன தம்பதியரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட சிங்கம்
Published on

கம்போடியாவில் அதிகாரிகள் பிடித்துவைத்திருந்த சிங்கம், பிரதமர் தலையிட்டால் உரிமையாளரிடம் ஓப்படைக்கப்பட்டது.

தலைநகர் புனோம் பென்னில் வசிக்கும் சீன நாட்டவர், தங்கள் வீட்டில் ஆண் சிங்கம் ஒன்றை வளர்த்து வந்தனர். சிங்கத்துடன் எடுக்கப்பட்ட டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி அதனை பிடித்துச்சென்றனர்.

இந்தநிலையில், அந்நாட்டு பிரதமர் ஹன் சென், சிங்கத்தை மீண்டும் சீன தம்பதியரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். சிங்கத்தை கூண்டில் அடைத்துவைத்து முறையாக உணவு அளிக்கவேண்டும் எனவும் அத்தம்பதிக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து சிங்கத்தை அதிகாரிகள் அவரது வீட்டிற்கே சென்று ஒப்படைத்தனர். சிங்கம் மீண்டும் பழைய உற்சாகத்தில் வீட்டிற்குள் வலம்வந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com