டைட்டானிக் கடிதம் 1,26,000 பவுண்டுகள் ஏலம் போனது

டைட்டானிக் கடிதம் 1,26,000 பவுண்டுகள் ஏலம் போனது
டைட்டானிக் கடிதம் 1,26,000 பவுண்டுகள் ஏலம் போனது
Published on

டைட்டானிக் கடிதம் 1,26,000 பவுண்டுகள் ஏலம் போய் உலகசாதனை படைத்துள்ளது. 

ஆஸ்கர் ஹோல்வர்சன் என்ற அந்த அமெரிக்க பயணிதான் இந்தக் கடிதத்தை எழுதியவர். தனது மனைவி மேரியுடன் டைட்டானிக் பயணத்தின் போது, தனது தாய்க்கு இக் கடிதத்தை அவர் எழுதி இருக்கிறார். இந்தக் கடிதம் 1912 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி எழுதப்பட்டது. அதற்கு அடுத்த நாள் டைட்டானிக் கப்பல் பெரிய பனிப்பாறையில் மோதியது. அதனால் அது கடலில் மூழ்கியது. பல ஆண்டுகள் கழித்து இந்தக் கப்பலை கண்டறிந்தனர். இக்கடிதம் டைட்டானிக் கப்பலின் பெயர் பொறித்த குறிப்பு தாளில் எழுதப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற ஏலத்தில் டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட சாவி மற்றும் டைட்டானிக் 'மெனு' ஒரு லட்சத்து 19 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது. வில்ட்ஷைரில் நடந்த ஏலத்தில் தொலைபேசி மூலமாக பங்கெடுத்த ஒரு பிரிட்டன்வாசியால் இக் கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இக்கடித்ததை வாங்கியவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அவர், வரலாற்று பொருட்களை சேகரிப்பவர் என்று ஏல நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ். குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com