"இனி துடைப்பக் கட்டையிலதான் விண்வெளிக்கு போகனும்" - ரஷ்யா நக்கலடித்த நாடு எது?

"இனி துடைப்பக் கட்டையிலதான் விண்வெளிக்கு போகனும்" - ரஷ்யா நக்கலடித்த நாடு எது?
"இனி துடைப்பக் கட்டையிலதான் விண்வெளிக்கு போகனும்" - ரஷ்யா நக்கலடித்த நாடு எது?
Published on

"அமெரிக்கா இனி துடைப்பக் கட்டையில் விண்வெளி செல்லும்" என்று ரஷ்யா கிண்டல் செய்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. இதற்கு பதிலடியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு இனி ராக்கெட் இஞ்சின்களை வழங்குவதில்லை எனவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ரோஸ்கோமாஸ்) தலைவர் டிமிட்ரி ரோகோசின் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "அமெரிக்காவுக்கு நூற்றுக்கணக்கான ராக்கெட் இஞ்சின்களை ரஷ்யா வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பல செயற்கைக்கோள் திட்டங்களுக்கு அடித்தளமாக ரஷ்ய ராக்கெட் இஞ்சின்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைன் விவகாரத்தில் ஒருதலைபட்சமாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. எனவே, இனிமேல் அந்நாட்டுக்கு ரஷ்யாவின் ராக்கெட் இஞ்சின்கள் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் (அமெரிக்கா) இனி துடைப்பக் கட்டை போன்ற ஏதாவது பொருளில் விண்வெளி செல்லட்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

பூமியில் இருந்து 350 கி.மீ. தொலைவில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com