பஹ்ரைனில் நடைபெற்ற ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லெர்க் பட்டத்தை வென்றார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஃபார்முலா 1 கார் பந்தயத்தில், சுமார் 308 கிலோ மீட்டர் தூரத்தை, ஒன்றரை மணிநேரத்தில் கடந்து முதலிடம் பிடித்திருக்கிறார் சார்லஸ் லெக்லெர்க். இதனால் அவருக்கு 26 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இவரை தொடர்ந்து ஸ்பெயின் வீரர் கர்லோஸ் செயின்ஸ் 2-ம் இடத்தை தக்க வைத்திருக்கிறார்.
பார்முலா 1 பந்தயத்தில் இதற்கு முன்னர் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் லெவிஸ் ஹாமில்டன், இந்த முறை 3-வது இடத்தையே பெற்றிருக்கிறார். இவர்களன்றி நடப்பு சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பனின் கார் பழுதானதால், தோல்வியை தழுவி உள்ளார்.
சமீபத்திய செய்தி: சீர்காழி: தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக இளைஞர் கைது