லெபனான் வெடிவிபத்து: கவனக்குறைவாக இருந்ததாக 16 அதிகாரிகள் கைது

லெபனான் வெடிவிபத்து: கவனக்குறைவாக இருந்ததாக 16 அதிகாரிகள் கைது
லெபனான் வெடிவிபத்து: கவனக்குறைவாக இருந்ததாக 16 அதிகாரிகள் கைது
Published on

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து துறைமுக மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதிக அபாயம் கொண்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்களை சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்ததாக அவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது.

அடுத்தகட்ட விசாரணைக்காக 16 அதிகாரிகள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் அதிபர் மைக்கேல் ஆவ்ன், துறைமுக சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் காரணமாகவே வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு சரக்குக் கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த வேதிப்பொருள் துறைமுகக் கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குப் பிறகு இதுதொடர்பாக பெய்ரூட் துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com