ஸ்பெயினில் வெடித்துச் சிதறி வரும் எரிமலையிலிருந்து வெளியேறும் நெருப்புக்குழம்பினால் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் அழிந்து விட்டன.
லா பால்மா தீவில் உள்ள கும்ரே வியாஜா எரிமலை சில நாள்களுக்கு முன் வெடித்தது. தொடர்ந்து நெருப்பு குழம்பினை வெளியிட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மலையடிவார கிராமங்களிலிருந்த மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எரிமலையின் நெருப்புக்குழம்பினால், நூற்றுக்கும் அதிகமான வீடுகளும் வணிக நிறுவனங்களும் கட்டடங்களும் அழிந்து போயின. எரிமலையின் நெரும்புக்குழம்புகள் இரவு நேரத்தில் சிவப்பு வண்ணத்தில் கொதித்து வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.