லாஸ்வேகாஸ் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு; பலர் கவலைக்கிடம்

லாஸ்வேகாஸ் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு; பலர் கவலைக்கிடம்
லாஸ்வேகாஸ் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு; பலர் கவலைக்கிடம்
Published on

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஆயுதமேந்திய நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஆயுதமேந்திய நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் 515-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அருகேயிருந்த ஹோட்டலின் 32-ஆவது மாடியில் இருந்து இசை நிகழ்ச்சிக்காக கூடியிருந்தவர்களை நோக்கி அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். 

இதில் பலரது உடலில் குண்டுகள் பாய்ந்தன. பதற்றம் அடைந்த மக்கள் அங்கிருந்து பதறி அடித்தபடி ஓடினர். அதற்குள் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அந்த நபரைக் கொன்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து லாஸ்வேகாஸுக்கு வரும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதேபோல் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமானங்களும், வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com