அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டின் ஜிம்னாஸ்டிக் அணி முன்னாள் மருத்துவருக்கு 175 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாசர். இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், வீராங்கனைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா சார்பில் பங்கேற்று தங்கம் வென்ற வீராங்கனை ஒருவரும் நாசர் மீது பாலியல் புகார் கூறினார். இது தொடர்பான வழக்கு விசாரணையில், லாரி நாசருக்கு 175 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.