சீனாவில் கண்டறியப்பட்ட ‘லாங்யா’ என்ற புதிய வைரஸ் கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் கிழக்குப் பகுதியில் உள்ள ஹெனான் மற்றும் ஷாண்டாங் ஆகிய மாகாணங்களில் தற்போது 35 பேரிடம் ‘லாங்யா’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது நிஃபா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வைரஸ் கொரோனாவை விட அச்சுறுத்தலானது என்றும், கடுமையான நோய்த்தொற்று ஏற்பட்டால் நான்கில் மூன்று பேரை கொல்லும் அளவிற்கு ஆபத்தானது என்றும் கூறப்படுகிறது.
லாங்யா வைரஸ் காரணமாக யாரும் தற்போது வரை உயிரிழக்கவில்லை. லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமே தற்போதைய தொற்றாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாங்யா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசியோ, தனி சிகிச்சை முறையோ தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலகத்தை அச்சுறுத்தும் அடுத்த பெருந்தொற்று நிஃபா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த ஒன்றாகத்தான் இருக்கும் என ஏற்கெனவே உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.