குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவை உளவாளி எனக் கூறி பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்து மரண தண்டனையும் விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் குல்பூஷணுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அவ்வழக்கு விசாரணை நெதர்லாந்தில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தங்கள் தரப்பு சார்பில் நியமிக்கப்பட்ட தற்காலிக நீதிபதிக்கு உடல் நலம் சரியில்லை என்றும், எனவே புதிய நீதிபதியை நியமிக்கும் வரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமெனவும் பாகிஸ்தான் தரப்பு கேட்டுக்கொண்டது. ஆனால் இதை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம், தங்கள் தரப்பு நீதிபதி இல்லாமலேயே வாதத்தை தொடருமாறு உத்தரவிட்டது. முன்னதாக குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென இந்திய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.