“எங்க மண்ணை கொடுங்க..”- பிரிட்டன் மன்னரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸி. நாடாளுமன்ற பெண் உறுப்பினர்!

செனட் சபை பெண் உறுப்பினரான பழங்குடியினத்தைச் சேர்ந்த லிடியா தோர்ப், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு சென்ற மன்னர் சார்லஸ் முன்பு காலனித்துவ ஒழிப்புக்கான முழக்கங்களை எழுப்பினார்.
பிரிட்டன் மன்னரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸி. நாடாளுமன்ற பெண் உறுப்பினர்
பிரிட்டன் மன்னரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸி. நாடாளுமன்ற பெண் உறுப்பினர்எக்ஸ் தளம்
Published on

பிரிட்டன் மன்னர் சார்லசுடன் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் மன்னர் சார்லஸ் தனது மனைவி கமீலாவுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனது மனைவி கமீலாவுடன் பிரிட்டன் மன்னர் சார்லஸ்
தனது மனைவி கமீலாவுடன் பிரிட்டன் மன்னர் சார்லஸ்

சிட்னி, கான்ஃபாரா உள்ளிட்ட நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு சென்ற மன்னர் சார்லஸ் அங்கு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பிரிட்டன் மன்னரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸி. நாடாளுமன்ற பெண் உறுப்பினர்
சாலை விபத்து மரணங்களில் தமிழகத்துக்கு 2-வது இடம்.. 6 மாநிலங்களில் மட்டும் நிகழும் 55% உயிரிழப்புகள்!

அப்போது செனட் சபை பெண் உறுப்பினரான பழங்குடியினத்தைச் சேர்ந்த லிடியா தோர்ப், மன்னர் சார்லஸ் முன்பு காலனித்துவ ஒழிப்புக்கான முழக்கங்களை எழுப்பினார். “எம் மக்களை இனப்படுகொலை செய்தீர்கள். எங்கள் நாட்டில் இருந்து திருடியவற்றையும், எங்களது நிலத்தையும் திருப்பி தரவேண்டும்” என அவர் கூச்சலிட்டார்.

பிரிட்டன் மன்னரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸி. நாடாளுமன்ற பெண் உறுப்பினர்
பிரிட்டன் மன்னரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸி. நாடாளுமன்ற பெண் உறுப்பினர்

மன்னர் சார்லஸ் முன்பு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பெண் உறுப்பினர் முழக்கமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை பாதுகாவலர்கள் அவையில் இருந்து
வெளியேற்றினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com