நடிகர் கெவின் ஸ்பேசி மீது ஆண்கள் தொடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு - ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி

பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம், அவரை நிரபராதி என தீர்ப்பளித்து விடுவித்தது.
Kevin Spacey
Kevin SpaceyTwitter
Published on

American Beauty, The Usual Suspects, Seven உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி, 2 ஆஸ்கார் உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். தன் பாலின ஈர்ப்பாளரான கெவின் ஸ்பேஸி மீது பல ஆண்கள் பாலியல் புகார்கள் கூறியுள்ளனர். கெவின் கடந்த 2004 முதல் 2015ஆம் ஆண்டு வரை லண்டனில் உள்ள ஓல்ட் விக் தியேட்டரில் கலை இயக்குநராக பணியாற்றினார். கெவின் ஸ்பேஸி மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை இந்த காலக்கட்டத்தில் நடந்ததாகவே இருக்கிறது.

Kevin Spacey
Kevin Spacey

சம்பவத்தின்படி தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கெவின் ஸ்பேசி மீது நான்கு ஆண்கள் ஒன்பது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த வழக்குகள் இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த ஒன்பது புகார்களில், தவறான நோக்கில் தொடுதல் தொடங்கி பாலியல் துன்புறுத்தல் வரை பல கடும் குற்றச்சாட்டுகள் அவர்மீது வைக்கப்பட்டன.

இது தொடக்கத்தில் 12 குற்றச்சாட்டுகளாக இருந்தது. அந்த 12-உடன் வழக்குக்கு இடையே ஒரு குற்றச்சாட்டும் சேர்ந்தது. மொத்தம் 13 குற்றச்சாட்டு இருந்த நிலையில், அதில் நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தது. அதையடுத்து பிற 9 வழக்குகள் நடந்துவந்தன.

Kevin Spacey
‘செய்யாத குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை’... பாலியல் வன்கொடுமை வழக்கில் நடந்தது என்ன?

நடிகர் கெவின் ஸ்பேஸி தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வந்தார். ஒருமித்த சம்மதத்துடன் நடந்த பாலுறவுதான் அது என்றும், தன்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே சிலர் புகார் கூறுகின்றனர் எனவும் கெவின் ஸ்பேஸி கூறிவந்தார்.

மறுபுறம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஆண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிறிஸ்டின் அக்னியூ, நடிகர் கெவின் ஸ்பேஸியை 'பாலியல் கொடுமைக்காரர்' (sexual bully) என்று விமர்சித்தார். கெவின் தனது பிரபலத்தைப் பயன்படுத்தி தன் பாலியல் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் என்றும் மற்றவர்களை வருத்தி பார்ப்பதில் மகிழ்ச்சியடைபவர் என்றும் வாதாடினார்.

இந்நிலையில் நடிகர் கெவின் ஸ்பேஸி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்த 12 நீதிபதிகள் கொண்ட நடுவர் மன்றம், அவரை அனைத்து வழக்குகளில் இருந்தும் நிரபராதி என தீர்ப்பளித்து விடுவித்தது. ஆதாரங்களை நிரூபிக்கத் தவறி விட்டதால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் பாலியல் குற்றவாளியாக கருதப்பட்ட 64 வயதான நடிகர் கெவின் ஸ்பேஸி நிரபராதி ஆகியுள்ளார். தன்னை நிரபராதி என நீதிமன்றம் அறிவித்ததற்காக நன்றி (grateful) தெரிவித்துள்ளார் கெவின் ஸ்பேஸி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com