விசா மோசடி | 11 நாட்களாக உணவு கூட இல்லை.. துபாயில் சிக்கிய கேரள சகோதரர்கள்.. பரிதாப நிலையில் மீட்பு!

துபாய் விசா முகவரால் ஏமாற்றப்பட்ட கேரள சகோதரர்கள் இருவர் 11 நாட்களாக உணவு கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் சமூக சேவகர்கள் அவர்களை மீட்டு மீண்டும் இந்தியா அனுப்பிவைத்தனர்.
துபாயில் மீட்ட கேரள சகோதரர்கள்
துபாயில் மீட்ட கேரள சகோதரர்கள்கூகுள்
Published on

கேரளாவில் விசா முகவரால் ஏமாற்றப்பட்ட சகோதரர்கள் இருவர் 11 நாட்களாக உணவு கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் சமூக சேவகர்கள் அவர்களை மீட்டு மீண்டும் இந்தியா அனுப்பிவைத்தனர்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய சகோதரர்கள், தங்கள் குடும்ப சூழ்நிலைக் காரணமாக துபாய் சென்று பணிபுரிய நினைத்துள்ளனர். இதற்காக உள்ளூர் ஏஜெண்ட் ஒருவரிடம் ஒரு லட்சம் கொடுத்து பார்வையாளார் விசாவில் இருவரும் துபாய் வந்துள்ளனர். ஆனால், ஏஜெண்ட் கூறியது போல் அங்கு இருவருக்கும் வேலை எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. ஆகையால் இருவரும் தங்களது நண்பர்களுடன் தங்கியிருந்து வேலை தேடி வந்துள்ளனர்.

துபாயில் மீட்ட கேரள சகோதரர்கள்
துபாயில் மீட்ட கேரள சகோதரர்கள்

ஒரு நாள் வேலைத்தேடி சென்ற இளைய சகோதரர் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியான மூத்த சகோதரர் வேலைத்தேடுவதை தவிர்த்து காணாமல் போன தனது சகோதரரை தேடி வந்துள்ளார்.

ஒரு வாரம் ஆகியும் சகோதரன் கிடைக்காத நிலையில் கவலைப்பட்டு கதறியுள்ளார். இதைத் தெரிந்துக்கொண்ட உலக மலையாளி கவுன்சில் மத்திய கிழக்கு பிராந்திய தலைவர் ஷைன் சந்திரசேனன், தங்களது குழுக்களுடன் இணைந்து காணாமல் போன இளைய சகோதரரை தேடிவந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி பூங்கா ஒன்றில் இளைய சகோதரர் தன்நிலை மறந்தவராய் பித்து பிடித்தவர் போல் அமர்ந்திருந்துள்ளதைக் கண்டு அவரை மீட்டனர்.

துபாயில் மீட்ட கேரள சகோதரர்கள்
கேரளா | பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 5 வயது குழந்தை கொலை... குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

விசாரணையில் இளைய சகோதரர் வேலைத்தேடி சென்ற சமயம் மர்ம நபர் சிலர் அவரை தாக்கியதில், நினைவிழந்து வீடு திரும்ப வழித்தெரியாமல் பூங்காவிலேயே தங்கிவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஒருவாரமாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்ததால் உடல் சோர்வடைந்து தனது பெயரைக்கூட மறந்து பயந்து பதுங்கி இருந்துள்ளார். அவரை மீட்ட சைன் சந்திரசேனன் குழுவினர், சகோதரர்கள் இருவரையும் மீண்டும் தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர் என்று பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com