“இந்திய மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்”-காஷ்மீர் விவகாரத்தில் ஹூண்டாய் அறிக்கை

“இந்திய மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்”-காஷ்மீர் விவகாரத்தில் ஹூண்டாய் அறிக்கை
“இந்திய மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்”-காஷ்மீர் விவகாரத்தில் ஹூண்டாய் அறிக்கை
Published on

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக அந்த நாட்டில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களான ஹூண்டாய், கியா, KFC, பீட்சா ஹட் மாதிரியான நிறுவனங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் போஸ்ட்களை பதிவு செய்திருந்தன. அதனை கவனித்த இந்திய நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை சமூக வலைதளங்களில் முன்னெடுத்தனர். இந்த நிலையில் ஹூண்டாய் இந்தியா, அதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என சொல்லியிருந்தது. இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும் சொல்லி இருந்தது ஹூண்டாய்.

இந்த நிலையில், தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு வரும் ஹூண்டாய் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரிடம் தென்கொரிய அமைச்சர் Chung Eui-yong தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நடந்ததற்கு வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சர்ச்சைக்குரிய அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் இந்தியாவில் 12 மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக சுமார் 4000 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் ஹூண்டாய் கடந்த டிசம்பரில் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com