ஆஸ்திரேலியாவில், 77 வயதான முதியவரைத் தாக்கி கொன்றதாக அந்நாட்டு காவல்துறையால் சந்தேகிக்கப்படுவது ஒரு மனிதர் அல்ல.. ஒரு விலங்கு.
வன விலங்கான கங்காருவைத் தனது செல்லப் பிராணியாக வளர்த்து வந்தவரை அந்த கங்காரு கொடூரமாகத் தாக்கி கொன்றதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், மேற்கு ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை குறைவாக உள்ள நகரமான ரெட்மண்டில் உள்ள அந்த முதியவரது காயம்பட்ட உடலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டார்.
பலத்த காயங்களுடன் அவரது உடலைப் பார்த்த உறவினர்கள், ஆம்புலன்ஸை ஏற்றி மருத்துவமனை செல்லும் முன்னரே அவர் இறந்துவிட்டார்.
அந்த முதியவர் உடலில் ஏற்பட்டு இருந்த காயங்களைப் பார்க்கும் போது, அது மனிதர்களால் ஏற்பட்டு இருக்கும் வாய்ப்புகள் குறைவு. எனவே அந்த கொடூர காயங்களை ஏற்படுத்தியது, அவர் செல்லமாக வளர்த்த வன விலங்கான கங்காருவாகத் தான் இருக்கும் என்று காவல்துறை கூறியுள்ளனர்.
ஒரு வன விலங்கை செல்ல பிராணியாக அவர் எப்படி வளர்த்தார் என்று விசாரணை தொடங்கும் என்று தெரிவித்த போலீஸார், மேலும் ஆம்புலன்ஸை அந்த பகுதிக்குள் வர விடாமல் அந்த கங்காரு பல இடையூறு கொடுத்ததாகவும், அதனால் வேறு வழியில்லாமல் சுட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின், கிரேட் தெற்குப் பகுதி தான் சாம்பல் நிற கங்காருவின் தாயகம். ஒரு ஆண் கங்காரு 7 அடிக்கும் மேல் 70கிலோ எடை வரை இருக்கும்.
இந்த சம்பவத்தை பற்றி ஆஸ்திரேலிய ஊடகங்கள், 86 ஆண்டுகளுக்குப் பின் கங்காரு மனிதன் மேல் தாக்கிய கொடூர தாக்குதல் என்று சொல்லப்படுகிறது.
சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழிலில் வெளியான செய்தி, ‘’ சிட்னியில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மருத்துவமனையில், 38 வயதான வில்லியம் க்ரூக்ஷாங்க், என்பவர் ஒரு பெரிய கங்காருவிடமிருந்து இரண்டு நாய்களை மீட்க முயன்றபோது அந்த கங்காருவால் தாக்கப்பட்டு தாடை உடைந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த மாதத்திலேயே சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் என்ற செய்தியும் வேகமாகப் பரவிவருகிறது.
இதனைத் தொடர்ந்து, கங்காரு வைத்திருப்பவர்களிடம் சரியான உரிமம் இருக்க வேண்டும் என்றும் அதனின் நடவடிக்கையில் சின்ன மாற்றம் தோன்றினால் கூட உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் ஆஸ்ரேலிய காவல்துறை எச்சரித்துள்ளது.