அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார்.
இதைத்தொடர்ந்து தற்போது 2024-ல் அமெரிக்காவின் 47 ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதி, நடைப்பெற்ற சூழலில், தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. முன்னதாக அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று (நவம்பர் 5) அமெரிக்க நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
தொடர்ந்து இந்திய நேரப்படி இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் காலை 11 மணி நிலவரப்படி, 230 இடங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் 210 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், மொத்தமுள்ள 50 மாகாணங்களில் அதிகபட்சமாக 54 எலக்டோரல் வாக்குகள் கொண்ட கலிபோர்னியா மாகாணத்தை கைப்பற்றியிருக்கிறார் கமலா ஹாரிஸ். இதன்மூலம் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்பிற்கும் எதிராக கடும் போட்டி நிலவி வருகிறது.
230 எலக்ட்டோரல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வரும் ட்ரம்ப், முன்னதாக அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான புளோரிடா மாகாணத்தில் தொடர்ந்து 3 வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபரை முடிவு செய்யும் போர்க்கள் மாகாணங்களான வடக்கு கரோலினா, மிஷிகன், அரிஸோனா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், ஜார்சியா உள்ளிட்ட மாகாணங்களில் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்.