அமெரிக்க தேர்தலில் ட்விஸ்ட்| ஜோ பைடன் மாற்றமா? கருத்துக்கணிப்பில் ட்ரம்பை முந்திய கமலா ஹாரீஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
கமலா ஹாரிஸ், ஜோ பைடன், ட்ரம்ப்
கமலா ஹாரிஸ், ஜோ பைடன், ட்ரம்ப்எக்ஸ் தளம்
Published on

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் அவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் களத்தில் உள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்குநேர் போட்டியிடுவதால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்குநேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு ட்ரம்பும் நேருக்குநேர் சந்தித்து விவாத்தினர். ட்ரம்புடன் நடந்த இந்த விவாதத்தின்போது, ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனின் வயது ஏற்கெனவே பேசுபொருளான நிலையில், அவருடைய தடுமாற்றப் பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்குப் பதில் வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்துவருவதாகவும், அவருக்குப் பதிலுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ராஜஸ்தான்| ’வண்டியில் இருந்தது எலுமிச்சை’ மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக டிரைவர் மீது கொடூர தாக்குதல்!

கமலா ஹாரிஸ், ஜோ பைடன், ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல்| ஜோ பைடனை மாற்றும் கட்சி? களமிறங்கும் ஒபாமா மனைவி!

இந்த நிலையில், ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பின்போது ட்ரம்பா, பைடனா? என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர்.

அதேசமயம் ட்ரம்பா, கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் ட்ரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், பைடனுக்கு உள்ளதைவிட கமலா ஹாரிசுக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக உள்ளது. அவர் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக, கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க:வாயில் சிக்கிக் கொண்ட மருந்துப் பாட்டில்; வலியால் துடியாய் துடித்த நாகப்பாம்பு! #ViralVideo

கமலா ஹாரிஸ், ஜோ பைடன், ட்ரம்ப்
டிரம்ப் vs பைடன்; அனல் பறந்த நேரடி விவாதம்... குற்றச்சாட்டுகளும் பதில்களும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com