அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் கமலா ஹாரிஸ் முந்துவதாக மற்றுமொரு கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு 45 சதவீதம் பேரும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தேசத்தின் முக்கிய பிரச்னைகளாக, பொருளாதாரம், சுகாதாரம், ஜனநாயக அச்சுறுத்தல் ஆகியவற்றை வாக்காளர்கள் முன்வைத்துள்ளனர். இதில், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதற்கு ட்ரம்ப்தான் சரியான நபர் என 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில், 40 சதவீதம் பேரே கமலா ஹாரிஸை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதே நேரத்தில், சுகாதாரம், ஜனநாயக அச்சுறுத்தல் போன்ற பிரச்னைகளை கமலா ஹாரிஸால் சரிசெய்ய முடியும் என பெரும்பாலானோர் கருத்து கூறியுள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.