ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில், ஒரு பள்ளியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
காபூலுக்கு மேற்கே சயீத்-உல்-சுஹாதா உயர்நிலைப்பள்ளி அருகே சனிக்கிழமை பிற்பகலில் மூன்று குண்டுவெடிப்புகள் நடந்ததாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. நேற்று மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தொடர் குண்டுவெடிப்புக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும், தனிநபரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. மேலும் தலிபான்களும் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என தெரிவித்தனர்.
"முதலில் ஒரு கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது, பின்னர் காபூலில் உள்ள பெண்கள் பள்ளி அருகே மேலும் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன" என்று பள்ளி ஆசிரியரான இப்ராஹிம் கூறினார், பலியானவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்றும் அவர் கூறினார்.