போதிய பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்து வருகிறார். இருப்பினும் இவரது லிபரெல் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வரவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், தன்பாலின திருமணம், சுற்றுச்சூழல், மின்சாரத்துறை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதாக வாக்குறுதியளித்திருந்தார். இவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.
இந்நிலையில் இவரது ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கனடா நாடாளுமன்றத்தில், ஆண்ட்ரிவ் ஸ்கீர் என்பவரின் தலைமையில் கொண்டு வரப்பட்டது. இதில் ஜஸ்டினின் லிபரெல் கட்சிக்கு 34.6% ஆதரவு கிடைத்தது. ஆண்ட்ரிவ் தரப்புக்கு 30.7% வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து ஆட்சி நடத்தும் அளவிற்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பதால் லிபெரல் கட்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டின் ஆளுநர் ஜூலி பெயட்டை சந்தித்து தனது ஆட்சிக் கலைப்பு தொடர்பாக ஜஸ்டின் அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனடாவில் அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என கூறினார். 1935க்கு பிறகு தற்போது தான் கனடாவில் போதிய பெரும்பான்மை இல்லையென நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.