நியூ ஜெர்ஸி மாநிலத்தில் 1951ல் ஜில் ஜேக்கப் பிறந்தார். ஜில்லுக்கு ஜோ பைடன் 2 வது கணவர். இவரின் முதல் கணவர் ஒரு கால்பந்து வீரர் வில் ஸ்டீவன்சன்,
ஜோபைடனின் முதல் மனைவி ஒரு கார் விபத்தில் இறந்தார். அவ்விபத்தில் பியூ, ஹண்டர் என்ற அவரது இரண்டு மகன்களும் உயிர் தப்பினர். 2015ல் பியூ மூளை புற்றுநோயால் இறந்தார். பிறகு ஜோபைடனுக்கு ஜில்லின் அறிமுகம் கிடைத்தது அச்சமயம் ஜில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். பிறகு ஜோபைடன் தனது காதலை ஜில்லிடம் தெரிவித்தார் என்றும், ஐந்து முறை ஜோ காதலை சொன்ன பிறகே அவரை ஏற்றுக்கொண்டதாக ஜில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன் அரசியலுக்குள் பிரவேசிக்க ஜில் பைடன் ஒரு முக்கிய காரணம். இருவருக்கும் 1977 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஜனநாயகக் கட்சியில் தமது கணவரை அதிபர் தேர்தல் வேட்பாளராக்க ஒப்புக் கொண்டு பேசிய போது, “ இந்த நாட்டை ஜோ பைடனிடம் நாம் ஒப்படைத்தால், இந்தக் குடும்பத்திற்கு அவ்ர் செய்ததை உங்கள் குடும்பங்களுக்கும் செய்வார். நம்மை ஒன்றாக்குவார், முழுமையாக்குவார், தேவையான நேரத்தில் முன்னோக்கி கொண்டு செல்வார். அமெரிக்காவின் உறுதிமொழியை நம் எல்லோருக்காகவும் அவர் காப்பாற்றுவார், என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன் துணை அதிபராகப் பணியாற்றியபோதுகூட அவர் நார்த்தர்ன் விர்ஜினியா கம்யூனிட்டி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
ஆசிரியர் என்பது நான் என்ன செய்கிறேன் என்பதை விட,. நான் யாராக இருக்கிறேன் என்பதது தான் சரி, ("Teaching is not what I do. It's who I am,") என்று அவர் கடந்த ஆகஸ்டில் ட்வீட் செய்திருந்தார். கடந்த சில வருடங்களாக அவர் புற்றுநோயால் அவதிக்கு உள்ளாகி இருந்தார். நேற்று ஜில் பைடனுக்கு புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜில் பைடன் (72 வயது) அறுவை சிகிசைக்காக மேரிலாந்தில் உள்ள தேசிய ராணுவ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 2 புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டதால், ஆபத்திலிருந்த ஜில் பைடன் ஆபத்திலிருந்து மீண்டு விட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.