இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போரில் அமெரிக்கர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா என்றும் துணை நிற்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழுவையும் அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ஃபிலடெல்பியாவில் (Philadelphia) செய்தியாளர்களை சந்தித்த அதிபர் பைடன், “ஹமாஸ் அமைப்பினருடன் ஒப்பிடும்போது, அல்குவைதா பயங்கரவாத அமைப்பினர் மோசமில்லை எனத் தோன்றுகிறது. ஹமாஸை ஒழிக்க இஸ்ரேலுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது” என தெரிவித்தார்.