தொடர்ந்து தடுமாற்றம்| மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க சென்ற ஜோ பைடன்!

ஜோ பைடன், தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ பைடன்
ஜோ பைடன்எக்ஸ் தளம்
Published on

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் களத்தில் உள்ளனர்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் மீண்டும் நேருக்குநேர் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றது பேசுபொருளானது. அப்போது தடுமாற்றம் கண்ட ஜோ பைடன் குறித்தும் அவர்களுடைய கட்சியினராலேயே விமர்சிக்கப்பட்டது. இதற்குப் பிறகும் ஜோ பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அதற்கு ஏற்றாற்போல் அண்மைக்காலமாக அவருடைய நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.

பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ’புதின்’ என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ’ட்ரம்ப்’ என்றும் தவறுதலாக கூறினார். என்றாலும், இத்தேர்தலில் இருந்து தாம் பின்வாங்கப்போவதில்லை என் ஜோ பைடனே உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜோ பைடன் தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பைடன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் அந்தப் பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுக்கச் செல்கிறார். அப்போது பைடனின் மனைவி பதற்றத்துடன் ஓடி வந்து பைடனை தடுத்து அவருக்கு புரிய வைக்கிறார். அதன்பின்னர் பைடன் அதிர்ச்சியுடன் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் விவாதங்களை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிக்க: கர்நாடகாவில் நிகழ்ந்த அதிசயம்| கொலையாளியை பிடிக்க 8 கிமீ தூரம் ஓடி மற்றொரு கொலையை தடுத்த மோப்ப நாய்!

ஜோ பைடன்
தடுமாற்றத்தின் உச்சம்| உக்ரைன் அதிபரை ‘புடின்’ என தவறாக அழைத்த ஜோ பைடன்.. அதிபர் தேர்தலில் மாற்றமா?

கடந்த 2 வருடங்களாகவே அவர் வயதைப் பற்றி விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்டோர் நேட்டோ உச்சிமாநாட்டின் மூன்றாம் நாள் விழாவுக்காகக் காத்திருந்தபோது, ஜோ பைடனின் தாமதமான வருகை விழாக் குழுவினரை கவலையில் ஆழ்த்தியது. அப்போது இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தன் கைகடிகாரத்தைப் பார்த்து ஜோ பைடனின் தாமதம் குறித்து எதிரே நின்றிருந்தவரிடம் முகம் சுளித்தது இணையத்தில் வைரலாகியது.

அதற்கு முன்பு, கடந்த மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாட்டின்போது, அந்நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனிக்கு விநோதமான முறையில் வணக்கம் வைத்த வீடியோவும், அதே நிகழ்வில் உலகத் தலைவர்களுடன் நடந்து சென்றபோது அவர்களைவிட்டு தனியாக பிரிந்து கால்போன போக்கில் ஜோ பைடன் உலாவிய வீடியோவும் பேசுபொருளானது.

இதையும் படிக்க: வெள்ளை நிறத்தில் கன்றுக்குட்டியை ஈன்ற எருமை மாடு! திகைக்கும் மக்கள்.. மாற்றம் நிகழ்ந்தது எப்படி?

ஜோ பைடன்
அமெரிக்க தேர்தலில் ட்விஸ்ட்| ஜோ பைடன் மாற்றமா? கருத்துக்கணிப்பில் ட்ரம்பை முந்திய கமலா ஹாரீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com