தடுமாற்றத்தின் உச்சம்| உக்ரைன் அதிபரை ‘புடின்’ என தவறாக அழைத்த ஜோ பைடன்.. அதிபர் தேர்தலில் மாற்றமா?

நிகழ்ச்சி ஒன்றில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, புடின் எனஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறாகக் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ பைடன், ஜெலன்ஸ்கி
ஜோ பைடன், ஜெலன்ஸ்கிஎக்ஸ் தளம்
Published on

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

அந்த வகையில் அவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் களத்தில் உள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்குநேர் போட்டியிடுவதால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்குநேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு ட்ரம்பும் நேருக்குநேர் சந்தித்து விவாத்தினர்.

ட்ரம்புடன் நடந்த இந்த விவாதத்தின்போது, ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனின் வயது ஏற்கெனவே பேசுபொருளான நிலையில், அவருடைய தடுமாற்றப் பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவருக்குப் பதில் வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்துவருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் அதிபராகும் முயற்சியை கைவிடுமாறு பைடனை வலியுறுத்த 25 ஜனநாயக எம்பிக்கள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”மருமகள் எங்களுடன் இல்லை; NOK விதியை மாற்ற வேண்டும்” - வீரமரணம் அடைந்த கேப்டனின் பெற்றோர் கோரிக்கை!

ஜோ பைடன், ஜெலன்ஸ்கி
சூடுபறக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் | ஜோ பைடனுக்கு சவால் விட்ட டொனால்டு ட்ரம்ப்!

மேலும், ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக, கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலக மாட்டேன் என்று ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடன் நீடிப்பார் என முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்ததுடன், “கோல்ஃப் விளையாட்டிலும் அவர் என்னை வீழ்த்த முடியாது” என சவால் விட்டார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, புடின் என தவறாகக் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்துகொண்டார். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெலன்ஸ்கியை வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் ஜெலன்ஸ்கியை பேச அழைத்த பைடன் அவரது பெயரை அதிபர் புடின் என தவறாக குறிப்பிட்டதால் சலசலப்பு எழுந்தது. பின்னர் சுதாகரித்துக்கொண்ட பைடன், புடினை விரைவில் வீழ்த்த இருக்கும் ஜெலன்ஸ்கியை பேச அழைப்பதாகக் கூறிச் சமாளித்தார். இதனிடையே மற்றொரு செய்தியாளர் சந்திப்பின்போது துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பதற்கு பதிலாக ட்ரம்ப் என்றும் தவறுதலாக ஜோ பைடன் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: அபுதாபி| 4 வயது மகளுக்கு விநோத நோய்.. தன் கல்லீரலைக் கொடுத்து காப்பாற்றிய ’பாசக்கார’ இந்திய தந்தை!

ஜோ பைடன், ஜெலன்ஸ்கி
அமெரிக்க அதிபர் தேர்தல்| வேட்பாளர் மாற்றமா? ஜோ பைடன் சொன்ன திட்டவட்டமான பதில்!

அதுபோல், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்டோர் நேட்டோ உச்சிமாநாட்டின் மூன்றாம் நாள் விழாவுக்காககக் காத்திருந்தபோது, ஜோ பைடனின் தாமதமான வருகை விழாக் குழுவினரை கவலையில் ஆழ்த்தியது.

அப்போது இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தன் கைகடிகாரத்தைப் பார்த்து ஜோ பைடனின் தாமதம் குறித்து எதிரே நின்றிருந்தவரிடம் முகம் சுளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாட்டின்போது, அந்நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனிக்கு விநோதமான முறையில் வணக்கம் வைத்த வீடியோவும், அதே நிகழ்வில் உலகத் தலைவர்களுடன் நடந்து சென்றபோது அவர்களைவிட்டு தனியாக பிரிந்து கால்போன போக்கில் ஜோ பைடன் உலாவிய வீடியோவும் பேசுபொருளானது.

அதுபோல், கடந்த ஜூன் 11ஆம் தேதி, அமேரிக்காவில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் விழித்துக்கொண்டே தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது. இந்தச் சம்பவங்கள் ஜோ பைடனின் உடல்நிலை குறித்து கடும் விமர்சனத்தை எழுப்பியிருப்பதுடன், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மாற்றம் எனச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: ஜெய்ப்பூர்|முற்றிய வாக்குவாதம்.. பாதுகாப்பு காவலரை கன்னத்தில் அறைந்த ஸ்பைஸ் ஜெட் ஊழியர்! #ViralVideo

ஜோ பைடன், ஜெலன்ஸ்கி
அமெரிக்க தேர்தலில் ட்விஸ்ட்| ஜோ பைடன் மாற்றமா? கருத்துக்கணிப்பில் ட்ரம்பை முந்திய கமலா ஹாரீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com