ஏலத்திற்கு வருகிறது வேலை வேண்டி ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம்!

ஏலத்திற்கு வருகிறது வேலை வேண்டி ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம்!
ஏலத்திற்கு வருகிறது வேலை வேண்டி ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம்!
Published on

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் 1973ம் ஆண்டு வேலைக்கு விண்ணப்பித்த விண்ணப்பம் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.

தொழில்நுட்ப சாதனங்களில் முன்னோடியாக திகழ்ந்து வரும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடித்தளமிட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தொழில்துறையில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் கதையை ஊக்கமாக சொல்வதும் உண்டு. சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாகத்தலைவர், தொழில்நுட்ப அறிவாளி எனப் புகழப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் 2011ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக காலமானார். புதிய தொழில்நுட்பம், அப்டேட் என தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு இன்றும் உலகளவில் ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில் 1973ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கைப்பட எழுதி வேலைக்கு விண்ணப்பித்த விண்ணப்பம் ஒன்றும் ஏலத்திற்கு வந்துள்ளது. charterfields என்ற தளத்தில் இந்த ஏலம் நடைபெறுகிறது. 2018ம் ஆண்டு ஏற்கெனவே ஸ்டீவ் ஜாப்ஸின் விண்ணப்பம் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது அது ஒரு லட்சத்து 75ஆயிரம் டாலர் ஏலம் போனது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் அப்போது ஏலத்தில் எடுத்தார்.

அந்த விண்ணப்பத்தில் மேஜர் படிப்பாக இங்கிலீஸ் லிட்ரேச்சர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்கில்ஸ் பகுதியில் கம்யூட்டர், கால்குலேட்டர் என்றும், தொழில்நுட்பம், டிசைன் பொறியியலில் சிறப்புத் தகுதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விண்ணப்பத்தில் எந்த வேலை, எந்த நிறுவனம் என்ற வேறு தகவல்கள் இடம்பெறவில்லை. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் கம்யூட்டர் நிறுவனம் என்பதை குறிப்பதாகவே உள்ளது. இந்த ஏலம் பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com