லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு: இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த பிரபலங்கள்

லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு: இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த பிரபலங்கள்
லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு: இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த பிரபலங்கள்
Published on

அமெரிக்காவின் ‌லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ், பாடகர் ஜேசன் அல்டீயன் ஆகியோர் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர். 

அமெரிக்காவின் மிக முக்கியமான கேளிக்கை நகரமாகவும், சுற்றுலாத் தலமாக விளங்குவது லாஸ்வேகாஸ். அப்பகுதியில் இசை நிகழ்ச்சிக்காக ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். கொண்டாட்டங்கள் நிறைந்திருந்த நேரத்தில், அங்குள்ள விடுதியின் 32வது தளத்தில் இருந்து ஸ்டீஃபன் பட்டாக் என்பவர் மக்க‌ளை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இந்த சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய பட்டாக் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ், பாடகர் ஜேசன் அல்டீயன் ஆகியோர் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்.  இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்வதுதான் உய‌ரிழந்தவர்களுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என பாடகர் ஜேசன் அல்டீயன் தெரிவித்துள்ளார். இதேபோல் ஜெனிஃபர் லோபஸூம் லாஸ் வேகாஸில் இந்த வாரம் நடக்கவிருந்த தமது இசை நிகழ்ச்சியை வேறு தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com