ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ கார் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகமெங்கும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் கார்களை பார்க்கிங் செய்வது என்பது தற்போது பெரும் பிரச்னையாகி வருகிறது. அதற்கு தீர்வு காணும் வகையில் குறைந்த இடவசதியில் பார்க்கிங் செய்து கொள்ளும் புதுவகையான ரோபோ காரை ஜப்பான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த காரை மடிக்கணினியை மடித்து வைப்பது போல் எளிதாக மடித்து வைத்துக் கொள்ள முடியும். இதனால் நெரிசல் மிகுந்த பகுதியிலும் இந்த காரை எளிதாக பார்க்கிங் செய்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.