ஜப்பானில் எளிதில் மடிக்கக்கூடிய தலைக் கவசங்கள் அறிமுகமாகியுள்ளன.
இயற்கைச் சீற்றத்தின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகும் ஜப்பானில் பூகம்பம், நிலநடுக்கம் போன்ற நேரங்களில் தலையில் அடிபட்டு மக்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக வெள்ளை நிற தலைக்கவசம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாடாளுமன்ற சபாநாயகர் தடமோரி ஓஷிமா தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிலநடுக்கத்தை எதிர்கொள்வது எப்படி என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் முதலில் அந்த தலைக்கவசத்தை அணிந்து காட்டினார்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்தவாறு அமர்ந்திருந்தனர். இந்த தலைக்கவசத்தை எளிதில் மடக்கிக்கொள்ளலாம்.