மனைவியுடனான விவாகரத்தை தடுக்க ஜப்பானியர்களின் புது ஐடியா ! கொரோனா பரிதாபங்கள்

மனைவியுடனான விவாகரத்தை தடுக்க ஜப்பானியர்களின் புது ஐடியா ! கொரோனா பரிதாபங்கள்
மனைவியுடனான விவாகரத்தை தடுக்க ஜப்பானியர்களின் புது ஐடியா ! கொரோனா பரிதாபங்கள்
Published on

கொரோனா வைரஸ் மன உளைச்சலால் ஏற்படும் விவாகரத்திலிருந்து தப்பிக்க ஜப்பானிய நிறுவனம் ஒன்று குறைந்த வாடகையில் தங்கும் விடுதிகளை கொடுக்க முன் வந்துள்ளது.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மிக முக்கியமாக ஜப்பானில் 7600 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இதன் காரணமாக ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

பெரும்பாலும் ஜப்பானியர்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தபடியே பணி புரிவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த கொரோனா காலத்தில் விவாகரத்தும் அதிகரித்து வருகின்றன. வீட்டிலேயே கணவன் - மனைவி இருப்பதால் அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பும், மனச்சோர்வுமே விவாகரத்து அதிகரிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த விவாகரத்து விவகாரத்தையே வியாபாரமாக மாற்றியுள்ளது வாடகைக்கு வீடு வழங்கும் நிறுவனம் ஒன்று. டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கசோகு என்ற நிறுவனம் "விவாகரத்து முடிவுக்கு முன்பு ஒரு முறை சிந்தியுங்கள்" என்று விளம்பரப்படுத்தி தங்களுடைய தற்காலிக சொகுசு வீட்டில் தங்குங்கள் என கூறியிருக்கிறது. ஒரு வீட்டுக்கு தேவையான அனைத்து பொருள்களும் இருக்கக் கூடிய இடமாக விளம்பரப்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த தற்காலிக வீட்டில் நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பமாகவே கூட வரலாம் எனவும் தெரிவித்துள்ளது.

வீட்டில் இருக்கும் பிரச்னைகளை மறந்து மனைவியுடனான விவாகரத்தை தவிர்க்க இந்த தற்காலிக வீட்டில் தங்க ஒருநாள் வாடகையாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3133 வசூலிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com