3700 பேருடன் ஜப்பான் வந்த சொகுசு கப்பலில் 135 நபர்களுக்கு கொரோனா!

3700 பேருடன் ஜப்பான் வந்த சொகுசு கப்பலில் 135 நபர்களுக்கு கொரோனா!
3700 பேருடன் ஜப்பான் வந்த சொகுசு கப்பலில் 135 நபர்களுக்கு கொரோனா!
Published on

3700 பேருடன் ஜப்பான் வந்த சொகுசு கப்பலில் 135 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், நோய் பாதிப்பு ஏற்படும் முன் தங்களை மீட்குமாறு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதுவரை சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1110ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் சீனாவே முடங்கிப்போயுள்ளது. இந்நிலையில் 3ஆயிரம் பேருடன் ஜப்பான் வந்த சொகுசு கப்பலில் 135 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 'தி டைமண்ட் பிரின்சஸ்' ‌என்ற சொகுசு கப்பல் ஹாங்காங்கில் ‌இருந்து ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்திற்கு வந்தது. பணியாளர்கள் உள்பட 3700 பேர்களுடன் பயணித்த இந்த ‌கப்பலில், 135 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், கப்பலில் பயணம் செய்த அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பயணிகள் கப்பலில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தக்கப்பலில் 6 தமிழர்கள் உள்பட 100க்கும் அதிகமான இந்தியர்களும் உள்ளனர். இந்நிலையில், அந்த கப்பலில் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் தங்களைப் பத்திரமாக மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதே கோரிக்கையை முன்னிறுத்தி அவரது குடும்பத்தினரும் கண்ணீர் மல்க மத்தி‌ய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com