இறந்தவர்களின் சாம்பல்.. எஞ்சும் உலோகங்கள்.. ரூ.377 கோடி வருமானம் ஈட்டும் ஜப்பான்!

இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய சாம்பலில் இருந்து எஞ்சிய உலோகங்களை விற்று ஜப்பானிய நகரங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
cremation file image
cremation file imagex page
Published on

இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய சாம்பலில் இருந்து எஞ்சிய உலோகங்களை விற்று ஜப்பானிய நகரங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் ஆண்டுதோறும் தகனம் செய்யப்படும் 1.5 மில்லியன் மக்களின் சாம்பலில் இருந்து தங்கம் மற்றும் பல்லேடியம் போன்ற உலோகங்களும், எலும்பு உள்வைப்புகளில் இருந்து டைட்டானியமும் சேகரிக்கப்படுவதாக அந்த தகவல் கூறுகிறது.

அதாவது, ஜப்பானில் வருடந்தோறும் சராசரியாக சுமார் 1.5 மில்லியன் மக்களின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. அவர்களின் உடலில் அணிந்தும், பொருத்தப்பட்டிருந்த தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் எரியூட்டப்பட்ட சாம்பலில் மிச்சம் இருக்கும். குறிப்பாக, அவர்களின் பற்களில் கட்டப்படும் தங்கம், பலேடியம் உள்ளிட்ட உலோகங்களின் எச்சங்களும், எலும்புகளில் இம்பிளாட் ஆக பொருத்தப்படும் டைட்டானியம் உள்ளிட்ட உலோகங்களின் எச்சங்களும் சாம்பலில் அதிகம் மிஞ்சுகின்றன.

இதையும் படிக்க: டெஸ்ட் தரவரிசை | முதலிடத்துக்கு முன்னேறிய பும்ரா.. கீழிறங்கிய அஸ்வின்.. Top 10 இடத்துக்குள் கோலி!

cremation file image
ஜப்பான்: மனைவிக்கு தினமும் கிட்டதட்ட 100 முறை ஃபோன் செய்த கணவர்! காரணம் என்ன தெரியுமா?

ஜப்பானில், அந்நாட்டின் சட்டப்படி எரியூட்டப்பட்டவர்களின் சாம்பலையும் அதில் இருந்து மிஞ்சிய எலும்புகளை மட்டுமே உறவினர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில்தான் இதுபோன்ற உலோகங்களை அந்த நாட்டு நகரங்கள் எடுத்துக் கொள்கின்றன. இதை ஜப்பானிய நகரங்கள் சேகரித்து விற்று பணமாக்குவதாகவும், 2010க்குப் பிறகு இது வேகமெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜப்பானில் 97% சதவீத மயானங்களை அரசே நடத்துவதால் இதன்மூலம் அந்நாட்டில் உள்ள பெரு நகரங்கள் அதிக லாபம் சம்பாதிப்பாகக் கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் அவ்வகை உலோகங்களை விற்று சுமார் 6.49 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.377 கோடி) வரை நகரங்கள் சம்பாதித்துள்ளன. குறிப்பாக, கியோடா நகரம் 303 மில்லியன் யென், யோகோஹாமா நகரம் 233 மில்லியன் யென், நகோயா நகரம் 225 மில்லியன் யென் சம்பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?

cremation file image
ஒடிசாவில் ஒரு காதல் சின்னம்! ஜப்பான் பெண்ணும் இந்திய ஆணும் கட்டிய ஹோட்டல்.. மகன் பகிர்ந்த சுவாரஸ்யம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com