பயணிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்த ஜப்பான் அனுமதி அளித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்திருந்ததுது. எனவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், பயணிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்த ஜப்பான் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '’பயணிகளுக்கு கோவாக்சின் பூஸ்டர் டோஸ் செலுத்த ஜப்பான் அனுமதி அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது எங்கள் கொரோனா தடுப்பூசியின் செயல்திறனுக்கு கிடைத்த மற்றொரு உலகளாவிய அங்கீகாரம்’’ என தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரலில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில், ’’மேட் இன் இந்தியா’’ தடுப்பூசியை ஜப்பான் சேர்த்தது. இன்று(ஆக்ஸ்ட் 5) கோவாக்சினை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த ஜப்பான் அனுமதி அளித்திருக்கிறது.