ஜாகுவர் நிறுவனத்தின் புதிய ஜாகுவர் ஈ பேஸ் கார் 50 அடி தூரத்தை குதித்துத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது.
ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவதைப் போல தலைகீழாக சுமார் 50 அடி தொலைவைக் குதித்துத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது ஜாகுவர் ஈ பேஸ் கார். இது ஜாக்குவார் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பாகும். சந்தைப்படுத்தப்படும் கார் ஒன்று இந்தச் சாகசத்தைப் புரிவது இதுவே முதல் முறையாகும். ’தி மேன் வித் தி கோல்டன் கன்’ என்ற ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தின் மூலம் இந்தச் சாகசம் புகழ்பெற்றது. இந்தச் சாகசத்தைப் புரிவதற்காக அதிகப் பயிற்சி பெற்ற ஓட்டுநர் பயன்படுத்தப்பட்டார். லண்டன் நகரில் இந்தச் சாகசம் நிகழ்த்தப்பட்டது.
இந்த சாகசத்தின் போது ஜாகுவர் கார் 50 அடி தூரத்தை 270 டிகிரி கோணத்தில் தாண்டி சாதனை படைத்தது. பல்வேறு பிரபல கார் நிறுவனங்கள் கார்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது, அந்த காரின் திறனுக்கேற்ப பல்வேறு சாகசங்களை செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஜாகுவர் நிறுவனம் கார் அறிமுகப்படுத்தப்படும் போது இது போல சாகசம் செய்தது இதுவே முதல்முறை ஆகும்.